Wednesday, July 26, 2006

வெண்ணிலா விண்ணிலா கண்ணிலா?

ஒளியும் நிழலும் உயிரில் கலந்த
உறவில் பிறந்த வடிவாலே
களிகொண்டலையும் விழிகள் அதிலே
விழும்போதினிலே கலையாமே

பாறை நடுவே மறையும் சிலையின்
வதனம் அதுபோல் அரிதாமே
பார்க்கும் திசையில் அழகே தெரியக்
கண்கள் அதுவே உளியாமே

Sunday, July 09, 2006

வெற்றிக் களிப்பு

இன்று நடந்த world cup final இல் இத்தாலி ஜெயித்ததோயில்லையோ, பிரான்சின் ஜினெடின் ஜிடென் தன் கால்களின் திறமையல்லாது தலையின் திறமையயும் காட்டினார்.

இத்தாலியின் மாத்தெராஜியின் நெஞ்சில் நிற்பதுபோல் ஒரு முட்டு. சிறந்த football வீரருக்கு கோல்டன் பூட் (golden boot) விருது கொடுப்பதுபோல் இவருக்கு golden முட்டு விருது கொடுக்கலாமே!

http://msn.foxsports.com/soccer/story/5760742

Tuesday, July 04, 2006

மனதிலே பட்டது - பட்டவுடன் சுட்டது

"வில்லியம் ப்ளேக்" என்ற ஆங்கில கவிஞரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீங்களா? அவரோட கவிதைகளை படிச்சிருந்தா நிச்சயமா ஞாபகம் இருக்கும். அதுல ஒண்ணு - " The Fly" என்கிற ஒரு தத்துவப் பாடல்.

ரொம்ப டச்சிங்கான கவிதையாயிட்டுதா, அதுனால நம்ம அதை தமிழிலே மொழிபெயர்த்தா என்னனு ஒரு முயற்சி.

இதோ ஒரிஜினல் -

Little Fly
Thy summers play,
My thoughtless hand
Has brush'd away.

Am not I
A fly like thee?
Or art not thou
A man like me?

For I dance
And drink & sing;
Till some blind hand
Shall brush my wing.

If thought is life
And strength & breath;
And the want
Of thought is death;

Then am I
A happy fly,
If I live,
Or if I die.

இது copy.

சின்னஞ்சிறு பூச்சி ஒன்று பறந்து வந்ததாம் - என்
சிந்தையிலா கையில் பட்டு சிறகொடிந்ததாம்
என்னைப் போல பூச்சி! நீயும் மனிதனில்லயோ? -வீழ்ந்த
உன்னைப் போல நானும் சிறு பூச்சியல்லவோ?

மண்ணில் வாழும் காலம்நின்று போகும் நாள்வறை - நானும்
உன்னைப் போல பாடிக்களித்தாடி மகிழ்வேன்
எண்ணம் சிந்தை என்பதுவே எந்தனுயிறென்றால்-நான்
இறப்பினிலும் வாழ்வினிலும் உந்தன் இனமே!

ஏதோ பரவாயில்லயா?